Rule72 தெரியுமா? எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு? ஒரு முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதை அறிந்து கொள்ள Rule72 மூலம் அறியமுடியும்.. 72 என்கிற எண்ணினை முதலீட்டுக்காக கிடைக்கும் வட்டி விகிதத்தால் (Rate Of Intrest) வகுத்தால் முதலீடானது எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பது தெரியும். உதாரணமாக வட்டி விகிதம் 6% ஆக இருந்தால், 72 என்ற எண்ணை 6 (வட்டி விகிதம்) என்கிற எண்ணால் வகுத்தால் 12 ஆக இருக்கும் ஆகவே ஒருவர் ஆண்டுக்கு 6% வட்டி தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்தால் அவருடைய முதலீடு 12 ஆண்டுகளில் இருமடங்கு ஆகும். எவ்வளவு வட்டி வேண்டும்? ஒரு முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதை அறிந்து கொள்ள Rule72 மூலம் அறியமுடியும்.என்பதை மேலே பார்த்தோம். அதே போன்று குறிப்பிட்ட காலத்தில் முதலீடு இரட்டிப்பு ஆகவேண்டும் எனில் எவ்வளவு வட்டி வேண்டும் என்பதை அறிந்து கொள்ள பின்வருமாறு கணக்கீடு செய்தால் அறிய முடியும். : உதாரணமாக ஒருவர் 50 லட்சம் ரூபாயை 8 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயாக உயர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ...