Rule72 தெரியுமா?
எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு?
ஒரு முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதை அறிந்து கொள்ள Rule72 மூலம் அறியமுடியும்..
72 என்கிற எண்ணினை முதலீட்டுக்காக கிடைக்கும் வட்டி விகிதத்தால் (Rate Of Intrest) வகுத்தால் முதலீடானது எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பது தெரியும்.
உதாரணமாக
வட்டி விகிதம் 6% ஆக இருந்தால்,
72 என்ற எண்ணை 6 (வட்டி விகிதம்) என்கிற எண்ணால் வகுத்தால்
12 ஆக இருக்கும்
ஆகவே ஒருவர் ஆண்டுக்கு 6% வட்டி தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்தால் அவருடைய முதலீடு 12 ஆண்டுகளில் இருமடங்கு ஆகும்.
எவ்வளவு வட்டி வேண்டும்?
ஒரு முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதை அறிந்து கொள்ள Rule72 மூலம் அறியமுடியும்.என்பதை மேலே பார்த்தோம்.
அதே போன்று குறிப்பிட்ட காலத்தில் முதலீடு இரட்டிப்பு ஆகவேண்டும் எனில் எவ்வளவு வட்டி வேண்டும் என்பதை அறிந்து கொள்ள பின்வருமாறு கணக்கீடு செய்தால் அறிய முடியும்.
:
உதாரணமாக ஒருவர் 50 லட்சம் ரூபாயை 8 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயாக உயர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
இங்கே
72 என்ற எண்ணை 8 (ஆண்டு) ஆல் வகுத்தால்.. கிடைக்கும் விடை 9 ஆகும்.
ஆக அவர் ஆண்டுக்கு 9% வட்டி தரக்கூடிய திட்டத்தில் 50 லட்சம் முதலீடு செய்தால்தான் அவருடைய முதலீடு எட்டு ஆண்டுகளில் ஒரு கோடியாக உயரும் என்பதை அறியலாம்.
பணவீக்கம்
இந்த 'விதி 72' பணவீக்கத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.
எதிர் காலத்தில் இன்றைய பணத்தின் உண்மையான மதிப்பை அறிவதற்கு உதவுகிறது
பணவீக்கத்திற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கணக்கிட இது உங்களுக்கு உதவுகிறது.
தற்போதைய பணவீக்கம் 5.5% என்று சொல்லலாம். நீங்கள் 72 ஐ 5.5% ஆல் வகுக்கும்போது..
பதில் 13.09 ஆண்டுகள்.
அதாவது,
இன்று உங்கள் கணக்கில் ₹1,00,000 இருந்தால்,
பணத்தின் மதிப்பு பாதியாக ஆக சுமார் 13.09 ஆண்டுகள் ஆகும் .
உங்கள் முதலீடுகள் மற்றும் நிதி தொடர்பான பிற செயல்பாடுகளில் இது உங்களுக்கு உதவுக்கூடும்
தோழமையுடன்
தாமு
Comments
Post a Comment