சினேகாவுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்காமல் இருக்க..? முதலீட்டில் இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க! 25,00,000 ரூபாயை முதலீடு செய்தால், மாதம்தோறும் 1,80,000 கிடைக்கும் என்று இரண்டு பேர் ஆசை காட்டி, நடிகை சினேகாவை ஏமாற்றியிருக்கிறார்கள். கடந்த மே மாதம் அவர் பணத்தைத் தந்த பின்பு, அவருக்கு மாதம்தோறும் தருவதாகச் சொன்ன பணம் வராமல் போனதால் நேற்று அவர் சென்னை போலீஸாரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் ஏமாற்றப்பட்ட மாதிரி நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் எனில், பின்வரும் 5 விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்ளுங்கள். சதுரங்க வேட்டை 1. அவர்களின் பேச்சைக் கேட்கவே கேட்காதீர்கள் மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று சொல்லி உங்களை யாராவது அணுகினால், இந்த விளையாட்டே வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இவர்கள் சாத்தான் வேதம் ஓதுவது மாதிரி. இவர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தாலே போதும், நம் மனதை மயக்கி, நம்மிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்காமல் விடமாட்டார்கள். `சதுரங்க வேட்டை’ படத்தில் வரும் ஹீரோவைப்போல, இது மாதிரியான மிக மென்மையாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்வதை எந்த வகையிலும் சந்தேகப்படுகிற மாதிரி இருக்கா...