எது வீணான நிலம் (Waste Land) *************************************************** (எழுத்தாளர் தோழர் முத்துநாகு அவர்களுடலய முகநூல் பதிவில் பதியபட்ட கட்டுரை இது. https://www.facebook.com/100002104018789/posts/4288484131231678/ ) தமிழக நிலப்பரப்பில் வேஸ்ட் லேண்ட் என்ற சொல்லாக்கம் இல்லை. இது பிரிட்டீஷ் ஆட்சியில் வந்தது. ஐந்திணையில் பாலை நிலம் திரிந்து மீண்டும் மாறிவிடும். அதே போல் நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு. இதில் தரிசு நிலத்தை பொட்டல் தரிசு, மேய்ச்சல் தரிசு, உப்புத் தரிசு, உவர் தரிசு, சுண்ணாம்புத் தரிசு, செவல் தரிசு, கரிசல் தரிசு, மணல் தரிசு, பாறைக்குட்ட தரிசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே சொல் முகலாயர் ஆட்சியில் ஜாரி என்ற சொல்லாடலுடன் உவர் ஜாரி பூமி, உப்பு ஜாரி பூமி, கரிசல் ஜாரி பூமி என்று சொன்னார்கள். தரிசு நிலங்களில் மட்டுமே மனித குலத்தை காக்க வல்ல மூலிகைகள் முளைத்துக்கிடக்கும். இதனால் தான் இங்கு மேய்திடும் வெள்ளாடு, செம்பறி ஆடுகளின் கறி சுவையானதாகும் உடல் நலத்திற்கு நலம் தருவதாகவும் உள்ளது. குறிப்பாக வெள்ளாட்டங்கறி நலம் விளைவிப்பதாக உள்ளது....