ஒவ்வொரு நாளும் நாம் செலவிடும் ரூபாயின் (Rupee) வரலாறு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ரூபாய்க்கு சுமார் 2200 ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு சிறப்புகள் கொண்ட நம் இந்தியக் குடியரசின் நாணய முறையான (Currency of the Republic of India) ரூபாயைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோமா? .
ரூபாய் இந்தியக் குடியரசின் நாணய முறை என்பது உங்களுக்குத் தெரியும். உலகில் நன்கு மதிக்கப்படும் நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று எனலாம். இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.பி.ஐ சட்டம் 1934 (RBI Act 1934.) வழங்கும் அதிகாரத்தின்படி இந்திய ரூபாய நாணயத்தை (Indian Rupee Currency) வெளியிட்டுக் கண்காணிக்கிறது.. இந்திய சூர் வம்சத்து மன்னன் ஷெர் ஷா சூரி காலத்திலிருந்து இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் ஊடாக தற்போதைய இந்தியக் குடியரசு வரையிலான ரூபாயின் வரலாற்றை இந்தப் பதிவு விவரிக்கிறது.
ரூபாய்: பெயர்க்காரணம்
ரூபாய் என்ற சொல் எப்படி வந்தது? ரூபா (Sanskrit: रूप) என்றால் தோற்றம் அல்லது வடிவம் அல்லது உருவம்என்று பொருள். “ரூப்யா” (Sanskrit: रूप्य) என்றால் நன்கு வடிவமைக்கப்பட்ட வெள்ளி (Wrought Silver) என்று பொருள்.
காகித பணம் (ஃபியட் பணம்)
என்பது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நாணயம்,
இது தங்கம்/வெள்ளி போன்ற ஒரு உலோகத்தால்
ஆனதள்ள.
ஃபியட் பணம் மத்திய வங்கிகளுக்கு(ரிசர்வ் வங்கி)
பொருளாதாரத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக்
கொடுக்கிறது,
ஏனெனில் எவ்வளவு பணம் அச்சிடப்படுகிறது
என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியும்.
இந்திய ரூபாய் (₹) போன்ற பெரும்பாலான
நவீன காகிதபணங்கள்/நாணயங்கள்
ஃபியட் பணமே
இந்திய ரூபாய் வரலாறு காலவரிசை
1938 ஜனவரி முதன் முதலாக ரூ. 5 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவத்தைப் பெற்றிருந்தது..
1938 பிப்ரவரி முதல் ஜூன் வரை ரூ. 10/-, ரூ. 1000/-, ரூ. 10000/- நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. 5,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் 1954 முதல் 1978 ஆம் ஆண்டு வரையில் புழக்கத்தில் இருந்தன.
1938: ரூ. 2/- நோட்டும் எட்டு அணா நாணயமும் திரும்பப் பெறப்பட்டன.
1943 ஆகஸ்டு ரூ. 2/- நோட்டு திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டது.
1950 சுதந்திரத்திற்குப் பிறகு 1 பைசா, அரை அணா, ஒரு அணா, இரண்டு அணா, கால் ரூபாய் அல்லது 4 அணா, அரை ரூபாய் அல்லது எட்டு அணா நாணயங்கள் வெளியிடப்பட்ட்டன.
1953 ரூபாய் புதிய நோட்டில் இந்தி மொழி பிரதானமாகக் காட்டப்பட்டது. இந்தி மொழியில் ரூபாய்கள் ரூப்யே (Rupye) என்று பன்மையில் குறிப்பிடப்பட்டது.
1954 ரூபாய் நோட்டுகள் ரூ. 1000/- ரூ. 5000/- ரூ. 10000/- மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டன.
1957 ஒரு ரூபாய் டெசிமல் முறைப்படி 100 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு ஒரு ரூபாய் என்பது 16 அணாக்களாகவும் 64 பைசாக்களாகவும் (காலணா) பிரிக்கப்பட்டிருந்தன.
1957 – 1967 ஒரு நயா பைசா, இரண்டு நயா பைசா, மூன்று நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா நாணயங்கள் அலுமினியத்தில் வெளியிடப்பட்டடன.
1967 ஆம் ஆண்டு இந்த அலுமினியம் நாணயங்களின் அளவுகள் குறைக்கப்பட்டன.
1980 அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த சின்னங்கள் புதிய நோட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. எ.கா.ரூ. 2/- நோட்டில் ஆர்யபட்டா கோளின் படம்; ரூ. 2/- நோட்டில் எண்ணெய் கிணறு படம்; ரூ. 5/- நோட்டில் பண்ணை இயந்திரமயமாக்கல் படம்; ரூ. 10/- நோட்டில் இந்திய கலை வடிவம் படம் (கோனார்க் சக்கரம்); ரூ. 2/- நோட்டில் இந்திய கலை வடிவம் (மயில்) படம்.
1987 அக்டோபர் புதிய ரூ. 500/- நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
1988 புதிய 10, 25, 50 பைசா நாணயங்கள் எஃகு (Stainless Steel) உலோகத்தில் வெளியிடப்பட்டன.
1992 புதிய 1 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் எஃகு (Stainless Steel) உலோகத்தில் வெளியிடப்பட்டன.
1995 ரூ. 1/-, , ரூ. 2/- நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
1996 புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு அசோக ஸ்தூபி படத்துடன் வெளியிடப்பட்டு வந்தன. புதிய நீரோட்டக் குறியீடு, சாளரத்துடன் கூடிய பாதுகாப்பு நூல், (Windowed Security Thread), மறைந்திருக்கும் படம் (Latent Image), பார்வையற்றோருக்காக புடைப்பு வரிக்கோட்டுடன் படம் ஆகியவை இந்த நோட்டுகளில் இடம்பெற்றன.
2005 – 2008 புதிய 50 பைசா, ரூ. 1/-, , ரூ. 5/- நாணயங்கள் எஃகு உலோகத்தில் வெளியிடப்பட்டன.
2009 – ரூபாய்க்கான குறி எழுத்தை “₹” இந்திய அரசு மார்ச் 5, 2009 ஆம் தேதி அறிவித்தது. ரூபாயின் குறியீட்டைத் கணனியில் தட்டச்சு செய்ய, நீங்கள் ‘Ctrl + Shift + press’ ஐ அழுத்த வேண்டும்.
2010 ரூபாய் குறியீடான (sign: ₹; code: INR) சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2011 50 பைசாவிற்குக் கீழே புழக்கத்தில் இருந்த 25 பைசா நாணயம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
2012 ரூபாய் குறியீடாக (sign: ₹; code: INR) சின்னம் ரூ.10. ரூ.20. ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகளில் பொறிக்கப்பட்டன.
2016 நவம்பர் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பண மதிப்புகளில் புதிய நோட்டுகள் வெளியடப்பட்டன. வங்கிகள் பழைய நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கின. இது போலவே 12 ஆகஸ்டு 1946 ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000, மற்றும் ரூ. 10000 நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார்கள். 1954 ஆம் ஆண்டு இந்த நோட்டுகள் மறுபடியும் அறிமுகப் படுத்தப்பட்டன. 16 ஆகஸ்டு 1978 ஆம் தேதி அன்று ரூ.100/- க்கு மேற்பட்ட பண மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன.
Fiat money is a government-issued currency
that is not backed by a commodity
such as gold.
Fiat money gives central banks(RBI)
greater control over the economy
because they can control how much
money is printed. Most modern paper
currencies,
such as the Indian Rupees (₹) are
fiat currencies.
Comments
Post a Comment