ஒரு தனி நபரின் சேமிப்பு கணக்கில்(SB A/C) ஒரு நிதியாண்டிற்குட்பட்ட காலத்தில் டெபாசிட் செய்கிற தொகை மற்றும் இருப்பு, ஆகியவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டுமா? வருமான வரிச் சட்டம் 114 இ விதிகளின்படி ஒரு தனி நபரின் வங்கி பரிவர்த்தனைகள் கண்காணிக்கபடும் மாத ஊதியம் பெறுபவர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஏதாவது ஒரு வங்கியில் குறைந்தது ஒரு சேமிப்புக் கணக்கையாவது வைத்திருக்கிறார்கள். . அதே நேரத்தில் பலரும் பல்வேறு காரணங்களுக்காக பல வங்கி கணக்குகளை வைத்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகைக்கு வரம்பு ஏதும் இல்லை.எனினும் மூன்றாம் நபர் ரொக்கமாக செலுத்துகிற தொகைக்கு PAN CARD அவசியம். சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை இருப்பாக வைக்க முடியும், மேலும் ஒரு நிதியாண்டில் வரி விலக்கு உண்டா இல்லையா ஐன்பது குறித்து ஏதேனும் தங்களுக்கு தெரியுமா?, கறுப்புப் பணத்தை அதாங்க கணக்கில் காட்டபடாத வருமானத்தை கண்கானித்து, வரி விதிப்பு நிலையை விரிவுபடுத்துவதற்கும், வங்கிகள், நிறுவனங்கள், அஞ்சலகங்கள் மற்றும் NBFC போன்றவற்றுடன...