Life Insurance & Married Women’s Property Act (MWP Act) – Details & Benefits
பெண்களின் சொத்துரிமைச் சட்டம் MWP ACT 1874.
பெண்களின் சொத்துக்களை கணவர் உட்பட அனைத்து உறவினர்களிடமிருந்தும் காப்பதே இதன் நோக்கம்.
இச்சட்டப்பிரிவு 6 இன்சூரன்ஸ் பாலிசிகள் பற்றியது.
இப்பிரிவின்கீழ் LIC பாலிசி எடுத்தால் பாலிசி பலன்களை கடன்தாரர்களோ நீதிமன்றமோ வருமானவரியோ அட்டாச்மென்ட் செய்யமுடியாது. நாமினிதாரராக நியமிக்கப்பட்டவர்களே உரிமத்தொகையை பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள்.
MWP சட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் பாலிசி வாங்கமுடியும்?
இச்சட்டத்தின் கீழ் திருமணமான எல்லா ஆண்களும் LIC பாலிசியை வாங்க இயலும். மணமுறிவு பெற்றவர்கள் மனைவியை இழந்தவர்கள்கூட இச்சட்டத்தின் கீழ் பாலிசி வாங்க இயலும்.தனிநபர்களின்மீது மட்டுமே பாலிசி எடுக்க இயலும்.மூன்றாம் நபர்கள் மீதான முன்மொழிவுகள், joint life proposal ஆகியவற்றை இச்சட்டத்தின் கீழ் முன்மொழிய இயலாது.
ஜிவன் அக்சை, ஆரோக்கியா தவிர்த்து ஏனைய பாலிசிகளை இச்சட்டத்தின் கீழ் முன் மொழியலாம்.
திருமணமான மகளிரும் இச்சட்டத்தின் கீழ் பாலிசி எடுக்க இயலும். குழைந்தைகளை பயனாளராக நியமிக்கலாம்.
கணவர் எந்த உரிமையும் கோர இயலாது. திருமணமான மகளிர் இச்சட்டத்தின் கீழ் பாலிசி பெற்றிருந்தால் அது அவளுடைய தனி சொத்தாக கருதப்படும்.
MWP சட்டத்தின் கீழ் பாலிசி எப்படி பெறுவது?
பாலிசியை முன்மொழியும்போதே MWP க்கான படிவத்தில் பாலிசி பயனாளிகளின் விவரத்தை நிரப்பி தந்தாலே போதுமானது. Trustee யை விருப்பப்பட்டால் நியமிக்கலாம். காப்புத் தொகை பனாளிகளுக்கு எந்தெந்த விகிதத்தில் வழங்கவேண்டும் என்பதைக்கூட தெரியப்படுத்தலாம். கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை.
ஏற்கனவே வாங்கிய பாலிசிகளில் MWP சட்டத்தின்கீழ் பயனாளிகளை நியமிக்க இயலாது. பதிய முன்மொழிவின்போது மட்டுமே MWP சட்டத்தின் கீழ் பயனாளிகளை நியமிக்க இயலும்.
யாரையெல்லாம் பயனாளிகளாக நியமிக்கலாம்
🔴மனைவி மட்டும்
🔴குழைந்தைகளை மட்டும்(சட்டபடி சத்தெடுத்தக் குழைந்தை உட்பட)
🔴மனைவி மற்றும் குழைந்தைகள் சேர்த்தோ தனியாகவோ நியமிக்கலாம்.
நியமிக்கப்பட்ட பயனாளிகளையும் காப்பாளர்களையும் (trustees) இடையில் மாற்றமுடியுமா?
நியமிக்கப்பட்ட பயனாளிகளை எப்போதும் மாற்ற இயலாது.
ஆனால் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் பாலிசதாரர்(life Assuredவிரும்பினால் எப்போது வேண்டுமானாலும் மாற்றலம்.
MWP சட்டத்தின் கீழ் பாலிசி எடுக்கும்போது தானகவே ஓர் அறங்காவல்(trust) உருவாகிறது.
இருந்த போதும் பாலிசிதாரர் விரும்பினால் காப்பாளரை தனியாக நியமிக்க இயலும்.
காப்பாளர் பெயரை குறிப்பிடலாம்.
பயனாளி மைனாராக இருக்கும்பட்சத்தில் கட்டாயம் காப்பாளரை(trustee) நியமிக்க வேண்டும்.
நியமிக்கப்படும் காப்பாளர் மேஜராக இருக்க வேண்டும்.
HUF (Hindu Undivided Family) இருக்கக்கூடாது.
பாலிசிதாரரே காப்பாளராகவோ பயனாளராகவோ இருக்க முடியாது.
ஆனால்
பயனாளரே காப்பாளராக இருக்கலாம்.
மூன்றாம் நபரை காப்பாளராக நியமிக்கலாம்.
பாலிசியின் பணப்பயன்{உரிமம் (மெட்யூரிட்டி லோன் உட்பட)} பயனாளிகளுக்காக காப்பாளர் பெறமுடியும்.
MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசியின் மீது கடன் வாங்கவோ அசைன்மென்ட் செய்யவோ முடியுமா?
MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசியின் மீது கடன் வாங்கவோ அசைன்மென்ட் செய்யவோ முடியாது.
ஆனால் பயனாளிகளின் தேவைக்காக கடன் பெற,பயனாளிகள் (காப்பளர் இருப்பின் காப்பாளரும்) பாலிசிதாரர் சேர்ந்து வின்னப்பிக்கவேண்டும். பாலிசியின் தன்மைக்கேற்ப பாலிசிக் கடன் கிடைக்கலாம்
MWP சட்டத்தின் கீழ் வாங்கிய எல்ஐசி பாலிசிகளை சரண்டர் செய்ய முடியுமா?
MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசியினை சரண்டர் செய்ய இயலும்.
ஆனால் பயனாளிகள்(மேஜர் மட்டும்) (காப்பளர் இருப்பின் காப்பாளரும்) பாலிசிதாரர் சேர்ந்து சரண்டருக்கு வின்னப்பிக்க வேண்டும். பாலிசியின் தன்மைக்கேற்ப பாலிசியின் சரண்டர் தொகை கிடைக்கலாம்
பாலிசிதாரர் எந்த பணப்பயனையும் பெறமுடியாது
MWP சட்டத்தின் கீழ் எடுத்த பாலிசி களின் முதிர்வுத்தொகை, எல்லா உரிமத்தொகை, வாழ்வுகால பயன்,கடன் சரண்டர் ஆகிய அனைத்து தொகைகளும் பயனாளிகளின்(காப்பாளர் இருப்பின் காப்பாளரின்) வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும்
மேலும் விவரங்களுக்கு
கி தாமோதரன் M.Com.,LLB.,HDCM
Financial Planner
+91 7358210672
Comments
Post a Comment