ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள். வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும். ரிட்டையர்மென்ட் கா...