வீட்டு மனை / கட்டிய வீடு வாங்குவதற்கு முன் கவனக்கவேண்டியவை இந்தியாவில் சொந்த வீடு என்பது பெருங் கனவாக இருக்கிறது. பணம் இருந்தாலும் வீட்டுக் கடன் கிடைத்தாலும், வீடு வாங்கும் செயல்முறை அவ்வளவு எளிதாக இல்லை! வீடு கட்ட நிலம் வாங்குவதாக இருந்தாலும், ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குவதாக இருந்தாலும், , நீங்கள் பலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மோசடிகளில் சிக்காமல் இருக்க, வீடு /வீட்டு மனை வாங்குவதற்கான முதல்படி விற்பனை ஒப்பந்தத்தை நீங்கள் சரிபார்ப்பதுதான். ஏமாறாமல் இருப்பது ஒரு பக்கம் என்றாலும், வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பின்வருபவை விற்பனை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும். குறிப்பட்ட காலத்துக்குள் ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் : வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தத்தில் வாங்குபவர் கையெழுத்திடும் பொழுதே டோக்கன் அட்வான்ஸ் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். அதன் பிறகு சில மாதங்கள் முதல் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டு வாங்குபவர் மற்றும் விற்பவர் இரண்டு தரப்பினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் அட்வான்ஸ்...