ஹெல்மெட்களில் என்னென்ன வகைகள் இருக்கின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். முதல் முறையாக ஹெல்மெட் வாங்க செல்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில் ஹெல்மெட்களில் நிறைய வகைகள் உள்ளன. எனவே ஹெல்மெட் வகைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. ஹெல்மெட்களில் என்னென்ன வகைகள் உள்ளன? என்பதை இந்த செய்தியில் உங்களுக்கு விளக்குகிறோம். ஆஃப் ரோடு ஹெல்மெட்கள் (Off-Road Helmets) ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த வகை ஹெல்மெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது அதிக தூசி மற்றும் அழுக்கு கண்களில் விழும். ஆனால் ஆஃப் ரோடு ஹெல்மெட்களை பயன்படுத்தும்போது, கண்களில் தூசி மற்றும் அழுக்கு விழுவதை கூடுமானவரை குறைக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில் ஆஃப் ரோடு ஹெல்மெட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்களுக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆஃப் ரோடு ஹெல்மெட்களில் வைசருக்கு பதிலாக சன்க்ளாஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்...