Skip to main content

Posts

Showing posts from February, 2021

Jeevan Umang - A review

  Key Features of LIC Jeevan Umang Policy This is an endowment cum whole life policyOffers 8% of Sum Assured after the premium payment term - till you are alive or till the age of 100Plan offers Simple Reversionary Bonus & Final Addition BonusTax Benefits on Premiums, Death Benefit & Maturity Benefits Benefits of LIC Jeevan Umang Policy Listed below are the LIC Jeevan Umang Plan Benefits. Death Benefit If the policyholder dies before the “Risk Commencement Date”  - All the premiums paid will be returned to the nominee. If the policyholder dies after the “Risk Commencement Date”  - The nominee will get the  Sum Assured on Death . Sum Assured on Death  is the  highest  of the following:10 times the Annualised PremiumBasic Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus The Death Benefit will never be less than 105% of all premiums paid. The premiums referred in the Death Benefit do not include taxes, Rider premiums and any increase...

பவர் ஆப் அட்டார்னி பத்திரம்

பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 33)   பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.  அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4). ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது. பிரிவு 33(1)(ஏ):  (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்): இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம் எழுதி அவரின் ...

உயில் முறையாக எழுதப்பட்டுள்ளதா ?

ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் நடைமுறையில் உள்ளது  என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளதா ?  என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் =======================================================       ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் நடைமுறையில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களி...

தாய் கார்டியனாக இருக்கலாமா?

தாய் கார்டியனாக இருக்கலாமா?        மாணிக்கம் செட்டியாரின் மகன்கள் பேரன்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்கள் ஏகப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள். மிக அதிகமாக சொத்துக்கள் இருக்கின்றன. 1976-ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஒரு பேரன் இந்த பாகப் பிரிவினை வழக்கைப் போடுகிறான். 1977-ல் வாதி (ஒரு பேரன்) மைனராக இருக்கும்போதே அவனிடம் விடுதலை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். அவன் அவ்வளவு உஷாராவன் இல்லை. அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இருந்து அந்த விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் மற்றவர்கள் சேர்ந்து 1977-ல் ஒரு பாகப் பிரிவினை பத்திரம் எழுதிக் கொண்டு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர்.  அந்த மைனர் பேரன், மேஜர் வயதை அடைந்தவுடன் பாக வழக்குப் போடுகிறான். அதில், அவனை ஏமாற்றி அந்த விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கப் பட்டுள்ளது என்றும், அவன் மைனராக இருந்தபோது, அவனின் தாயார் அவனுக்காக கார்டியனாக அதில் கையெழுத்து செய்துள்ளார் என்றும், அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இயங்க முடியாது (She is neither de facto guardian nor a natural ...